தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தளபதி விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும், செய்தியாளர்களும் ஒரே நேரத்தில் கோட்டை வளாகத்தில் குவிந்ததால், அங்கு கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறை பலத்த பாதுகாப்பு அளித்தும், கட்சியினர் மற்றும் செய்தியாளர்களின் தள்ளுமுள்ளு காரணமாக அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

இந்த கடும் நெரிசலில் சிக்கிப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பதற்றம் தொற்றிக்கொண்டது.

உடனடியாக சக காவலர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜய்யின் இந்தத் திடீர் வருகையும், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதல் போன்ற சூழலும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.