மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பெண்களிடம் விடுத்த ஒரு கோரிக்கை இப்போது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டார்ஜிலிங் மற்றும் நக்சல்பாரி பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய மம்தா, தேர்தல் ஆணையமும் பாஜகவும் இணைந்து மோசடியில் ஈடுபடுவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறிப்பாக, வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளைப் பாதுகாக்கப் பெண்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், “வாக்குச்சாவடிகளைப் பாதுகாக்க உங்கள் வீட்டுச் சமையலறையில் என்ன இருக்கிறதோ (கரண்டி, கத்தி, உருட்டுக்கட்டை போன்றவை) அதையெல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்” என்று ஆவேசமாகப் பேசினார்.

வெளியாட்கள் தேர்தல் பணியில் தலையிடுவதைத் தடுக்கவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மேற்கு வங்கத்தில் அமைதி நிலவவும் பெண்கள் இந்தச் சிறப்பு முன்னெடுப்பை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.