திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு கடையில் இருந்து தண்ணீர் லாரி தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கோவையிலிருந்து தனியார் பேருந்து தாராபுரம் நோக்கி வந்தது. இந்நிலையில் ருத்ராவதி அருகே வாய்க்கால் பாலம் பிரிவில் சென்றபோது லாரி வலது புறம் திரும்ப முயன்றது. அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக தண்ணீர் லாரி மீது மோதியது.

இதனால் லாரி கவிழ்ந்து முன்புற சீட்டில் அமர்ந்திருந்த கட்டிட தொழிலாளி ரவி தண்ணீர் லாரியின் அடிப்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லாரி டிரைவர் நந்தகுமார், பிரபு ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.