செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் கருப்பூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும் ஐந்து வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேசன் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி புதுமனை புகுவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

அதற்கான அழைப்பிதழை கொடுப்பதற்காக கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது மாத்தூர் அருகே வளைவில் திரும்ப முயன்ற போது வெங்கடேசன் ராட்சத ட்ரைலர் லாரியை பார்த்து வெங்கடேசன் தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்தினார். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரகடத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி சென்ற தனியார் பேருந்து அதிவேகமாக வந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி மீது மோதியது.

இதனால் பேருந்துக்கும் லாரிக்கும் இடையே சிக்கி வெங்கடேசனும் ஜெயலட்சுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே உயிரிழந்த வெங்கடேசன் ஜெயலக்ஷ்மி ஆகியோரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.