எதார்த்தமான படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி, தனது எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைக் குறிப்பிட்டு, தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், நலிந்த கலைஞர்களைக் காப்பாற்றவும் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அதில், லஞ்சமும் ஊழலும் இல்லாத ஒரு நிர்வாகத்தை இந்த அரசு வழங்கும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கேரளாவில் இருப்பது போல தமிழ்நாட்டிலும் அரசு தியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘திரைப்பட ரசனை’ படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். தமிழக அரசு சார்பில் ‘உலகத் திரைப்பட மாநாடு’ நடத்தப்பட வேண்டும், படப்பிடிப்பு தளங்களுக்கு ஆன்லைன் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வர வேண்டும்.

“>

மேலும் சுயாதீனப் படங்களுக்கு அரசு நேரடியாக நிதியுதவி வழங்க வேண்டும் மற்றும் நலிந்த திரைக்கலைஞர்களுக்கு வீட்டு வசதித் திட்டங்களை வேகப்படுத்த வேண்டும் போன்ற நீண்ட காலக் கொள்கை மாற்றங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான இந்த அரசு நிச்சயம் கையில் எடுக்கும் என நம்புவதாகச் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.