தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமான சோகத்தில் இருந்து இன்னும் ரசிகர்கள் மீளாத நிலையில், அவரது கைப்பட எழுதப்பட்டது போன்ற ஒரு உருக்கமான இறுதி அறிக்கை சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் நெகிழ வைத்துள்ளது.
அவரது லெட்டர் பேடில், அவரது கையெழுத்துடன் வெளியாகியுள்ள அந்த இரண்டு பக்கக் கடிதத்தில், “சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது” என்ற வாக்கியத்தைக் குறிப்பிட்டுத் தனது கோடானு கோடி ரசிகர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், தனது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, ‘என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன்’ என்றும், தனது மகன் சாந்தனுவின் வெற்றிக்கு ரசிகர்கள் இனி தன் ஸ்தானத்தில் இருந்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டியுள்ளார்.
From the OFFICE of
Director #KBhagyaraj sir pic.twitter.com/ikSx6KwOMt— K Bhagyaraj (@UngalKBhagyaraj) June 30, 2026
“>
‘expiry date குறிக்கப்படாத உடல் இது’ எனத் தனது பாணியில் தத்துவார்த்தமாக அவர் எழுதியுள்ள இந்த இறுதி யாத்திரைக் கடிதம், தற்போது ரசிகர்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
