இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமானவர் M.S  தோனி. இவருக்கு எந்தளவிற்கு கிரிக்கெட் மீது நாட்டம் இருக்கிறதோ அதே அளவிற்கு  பைக் மற்றும் கார்கள் மீதும் அதிக  நாட்டம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தோனி தனது வின்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டிச் செல்வது இணைய பத்தில் வைரலாகி வருகிறது.

தோனிக்கு பைக் மற்றும் கார்கள் மீது அளவு கடந்த ஆசை இருப்பதாக நிறைய பேட்டிகளில் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே தனது வின்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரை ராஞ்சியில் ஓட்டிச் செல்வதை ரசிகர் ஒருவர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.