மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது..

வெஸ்ட் இண்டீஸ்ஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 5 டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் கட்டமாக நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது ரோஹித் படை. இதனை தொடர்ந்து ஒரு நாள்போட்டி பார்படாஸின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கி ஆடி வருகிறது.. இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆடும் லெவனில் இடம்கிடைக்கவில்லை..

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய லெவன் :

ரோஹித் ஷர்மா (கே), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஆர் ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், உம்ரான் மாலிக்.

முதல் ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் லெவன் :

ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மேன் பவல் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், குட்கேஷ் மோதி, யானிக் கரியா.