இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ் அணி..

வெஸ்ட் இண்டீஸ்ஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 5 டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது இந்திய அணி. இதனை தொடர்ந்து முதல் ஒரு நாள்போட்டி பார்படாஸின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. துவக்க வீரர்களான கைல் மேயர்ஸ் 2 ரன்னிலும், பிராண்டன் கிங் 17 ரன்னிலும் அவுட் ஆகினர். அதேபோல அலிக் அதானாஸ்  22  ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹெட் மயர் – சாய் ஹோப் ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்த நிலையில், ஹெட் மயர் 11 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து வந்து வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.. அதன்பின் வந்த ரோவ்மேன் பவல் 4, ஷெப்பர்ட் 0, டொமினிக் டிரேக்ஸ் 3, யானிக் கரியா 3, குட்கேஷ் மோதி 0 என அனைவரும் அவுட்டாக, மறுமுனையில் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் ஹர்திக் பாண்டியா, முகேஷ் குமார், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.. அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியில் முகேஷ் குமார் ஒரு விக்கெட் எடுத்தது அசத்தியது குறிப்பிடத்தக்கது.