கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் நடிகர் விஜயின் தவெக பொதுக்கூட்டங்கள் தொடர்பான வழக்குகளை அடுத்து, அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழக அரசு, அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், “ரோடு ஷோக்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளே முழுப் பொறுப்பு” என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 50,000 பேருக்கு மேல் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் மாநாடுகளுக்கு, 30 நாட்களுக்கு முன்பே அனுமதி கோர வேண்டும் என்றும், நிகழ்ச்சி துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
