40 மணி நேரத்திற்கான ஊதியத்தை வழங்கிவிட்டு 70 மணி நேரம் வேலை பார்க்க சொல்வதில் நியாயம் இல்லை என cult.fit சிஇஓ முகேஷ் பன்சால் தெரிவித்துள்ளார். வேலைக்கு செல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனக் கூறிய பன்சால், ஒரு மனிதனுக்கு முதலில் ஆரோக்கியம், குடும்பம், வேலை, அமைதியான மனநிலை ஆகியவை தான் முக்கியம் என்றார். இதற்கு முன்னதாக நாடு முன்னேற இளைஞர்கள் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.