ஐபிஎல் தொடரில் 13வது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. கடைசியில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஸ் ஆர்யா ஆடியபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சு மூலம் விக்கெட்டை கைப்பற்றினர். இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்று தன்னுடைய கைகளில் எழுதுவது போன்று “நோட்புக்” கொண்டாட்டத்தில் திக்வேஷ் ரதி ஈடுபட்டார்.
இருந்தாலும் இதனை கண்டு கொள்ளாமல் பிரியன்ஸ் ஆர்யா சென்று விட்டார். இது ஒட்டுமொத்த பஞ்சாப் அணி ரசிகர்களையும் கடுப்பில் ஆழ்த்தியது. முதலில் பொறுமையாக விளையாடிய பஞ்சாப் அணி அந்த சம்பவத்திற்கு பிறகு அதிரடி காட்டியது . திக்வேஷ் நல்ல திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் அவருடைய இந்த கொண்டாட்டமானது முகம் சுளிக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தார்கள். மரியாதையோடு நடந்து கொள்ளும் அணிக்கு பவர் பிளே விருது கிடைக்கும். ஆனால் லக்னோ வீரர் செய்த இந்த காரியம் அந்த அணியின் புள்ளிகளை கடுமையாக பாதிக்கும் வகையில் இருக்கும் என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.
