தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடை ஊழியர்களுக்குப் புத்தாண்டு பரிசாகப் புதிய சம்பள விவரங்கள் மற்றும் கூடுதல் படிகள் குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஊதிய உயர்வு பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர்களுக்கு அவர்களின் பணிச்சுமைக்கு ஏற்ப ₹1,500 முதல் ₹2,000 வரையிலும், கட்டுநர்களுக்கு (Packers) ₹1,000 முதல் ₹1,500 வரையிலும் கூடுதல் படிகள் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​மேலும், மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயணப்படி எவ்வித மாற்றமுமின்றி ₹2,500-ஆகவே தொடரும் என அரசு உறுதி அளித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.