தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாகவே அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்று அடைகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளது. அரசும் இதனை தடுக்க நடவடிக்கை எடுத்து இருந்தாலும் அதனை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கடத்தல் மற்றும் பதுக்கள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
