அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பு ரேஷன் கடை ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை மேற்கு வங்க மாநில அரசிடம் வலியுறுத்தி வரும் நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் முதல் ரேஷன் சேவை நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கூறுகையில், எங்கள் மாநில குழுவை நீட்டிக்கப்பட்ட கூட்டத்தில் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் வங்காளத்தின் தெற்கு டீலர்கள் டிசம்பர் மாதம் முதல் ரேஷன் சேவைகளை செய்ய மாட்டார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதைய நிலவரப்படி அகலவிலைப்படையை உயர்த்தி வருகிறார்கள். ஆனால் அதே அளவு ரேஷன் டீலர்களின் கமிஷன் உயர்த்தப்படாமல் உள்ளது. கொரோனா காலத்தில் மாநில அரசு இலவச ரேஷன் கடை அறிவித்த நிலையில் அதனால் ஏற்பட்ட கடன் இன்னும் நிலுவையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த மாதம் முதல் ரேஷன் சேவைகள் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.