உத்தரப்பிரதேசம், கிரேட்டர் நோய்டாவில் 9 கோடி ரூபாய் GST மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சீனப் பெண், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது செய்தியாளர்களை மிரட்டிய அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அலிஸ் லீ (அல்லது லி தெங்லி) என்ற அந்த சீன நபர், Ten Tech LED Display Pvt Ltd எனும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிறுவனத்தின் இயக்குநர் வினய் குமார் உடன் சேர்ந்து, தவறான ஜிஎஸ்டி வரி வகைகளில் ரிட்டர்ன் தாக்கல் செய்து ₹9.19 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தியதாக மத்திய ஜிஎஸ்டி துறை விசாரணையில் கண்டறிந்தது.

புதன்கிழமை, அலிஸ் லீ மற்றும் வினய் குமார் கைது செய்யப்பட்டு, மறுநாள் மீரட்டில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, செய்தியாளர்கள் வீடியோ எடுக்க முயன்றதை கண்டதும், அலிஸ் லீ கோபத்தில் வெடித்து, காரில் இருந்து கதவைத் திடீரெனத் திறந்து, சீன மொழியில் கூச்சலிட்டதோடு, கை விரித்தபடி ஊடகவியலாளர்களை தள்ள முயன்றார்.

“>

 

இந்த நேரத்தில், அருகில் இருந்த ஒரு வழக்கறிஞர், “நீங்க போங்க… அவங்க கோபத்துல இருக்காங்க” என்று மீடியாவிடம் வீடியோ எடுக்க வேண்டாம் எனக் கூறினார். இந்த சம்பவம், அந்த இடத்தில் இருந்த ஊடகபதிவாளர்களால் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு இன்ஸ்டாகிராமிலும் X-லிலும் வைரலாகி வருகிறது.

சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள், “மோசடி செய்து பிடிபட்டதற்கே மேலே ஊடகங்களை மிரட்டுறாங்க” என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது அலிஸ் லீ, வினய் குமார் இருவரும் செப்டம்பர் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு பொதுநலக்கட்டண முறைகேடு வழக்கில், வெளிநாட்டு நபர் ஈடுபட்டதுடன், ஊடகத்தினரிடம் கையாளும் போக்கு பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.