அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த மைக்கேல் கார்ஸியா என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போஸ்ட்மேட்ஸ் என்னும் டெலிவரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு மைக்கேல் கார்சியா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு சென்று காரில் இருந்தபடியே  டீ வாங்கினார். கடை ஊழியர் அட்டைப்பெட்டியில் வைத்து டீயை கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டீ மைக்கேல் மடியில் சிந்தியது. அந்த டீ சூடாக இருந்ததால் மைக்கேல் ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மைக்கேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மருத்துவமனையில் பெற்ற சிகிச்சைகள், தோல் அறுவை சிகிச்சை, தீக்காயத்தால் ஏற்பட்ட சிதைவு ஆகியவை பற்றி நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர். இறுதியில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மைக்கேலுக்கு இந்திய மதிப்பில் 433 கோடி ரூபாய் பணத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  இது தொடர்பாக ஸ்டார்பக்ஸ்  மேல்முறையீடு செய்ய போவதாக கூறப்படுகிறது.