மதுராவில் உள்ள ஒரு உணவகம் மற்றும் பாரில், பில் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
மதுராவைச் சேர்ந்த ஒரு குடும்பம் அந்த உணவகத்தில் விருந்து போட்டிருந்ததாக தகவல். விருந்து முடிவில், ரூ.30,000 பில் வசூலிப்பது தொடர்பாக குடும்பத்தினர் மற்றும் உணவக ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகராறு அதிகரித்து, அங்கு பணியாற்றிய பவுன்சர்கள் ஆண் உறுப்பினர்களை தாக்கியதுடன், பெண்கள் மீது தள்ளி தாக்க முயன்றதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. சில பெண்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல்.
मथुरा से एक गंभीर मामला सामने आया है, जहां थाना हाईवे क्षेत्र स्थित ट्रक नमक रेस्टोरेंट एंड बार में बिल को लेकर शुरू हुआ विवाद देखते ही देखते मारपीट मारपीट में बदल गया। इस पूरे घटनाक्रम का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है, जिसमें होटल के बाउंसरों और स्टाफ को ग्राहकों… pic.twitter.com/jpuDZPqb1O
— News Bharat 24 (@nbh24official) November 29, 2025
சம்பவத்திற்குப் பிறகு, குடும்பத்தினர் ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளையும் பெற்றுள்ளனர். இருப்பினும், இதுவரை அவர்களால் போலீசில் முறையான புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வைரலான வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன என்றும், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சம்பவத்தில் தொடர்புடைய பவுன்சர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
