முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜியோ 259 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்குவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பெற லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என அதனுடன் லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியான தகவல் என போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே இந்த லிங்கை கிளிக் செய்தால் நீங்கள் பணத்தை இழக்க நேரிடலாம்.