துபாயில் வசிக்கும் இந்திய தொழில்முனைவோர் சீமா புரோகித், தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

“இந்தியாவில் பெங்களூருவில் மாதம் ரூ.18,000 சம்பளத்தில் வேலை செய்தபோதுதான் உண்மையான மகிழ்ச்சி இருந்தது. ஆனால் இன்று துபாயில் அதிக சம்பளம் பெற்றாலும் அந்த சுகம் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். நல்ல வேலை, உயர்ந்த சம்பளம் இருந்தும் மனநிறைவு இல்லாத வாழ்க்கை தான் வெளிநாட்டில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சீமா புரோகித் தனது முதல் சம்பளம் கிடைத்த நாளை நினைவு கூர்ந்து, “அந்த 18 ஆயிரம் ரூபாயில் பிஜி வாடகை, ஸ்ட்ரீட் ஷாப்பிங், கேன்டீன் உணவு, வார இறுதி கிளப்பிங் எல்லாம் செய்து முடித்துவிடுவேன். அதோடு சேமிப்பதற்கும் பணம் இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Seema (@seemapurohit018)

“>

அப்போது நான் உலகிலேயே மிகவும் சந்தோஷமான பெண்ணாக இருந்தேன்” எனக் கூறியுள்ளார். ஆனால், “வாழ்க்கையில் அதிக சம்பளம், நல்ல வாய்ப்புகள் வேண்டும் என்று ஓட்டத்தில் இறங்கிய பிறகு, அந்த அமைதியே மாறிப்போயிற்று” என்றும் அவர் மனமுடைந்து பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ பலரின் மனதையும் தொட்டுள்ளது. “30 ஆண்டுகளுக்கு முன் 100 ரூபாய் பாக்கெட் மணி கிடைத்தாலும் சந்தோஷமாக இருந்தோம். இப்போது அதிகம் இருந்தும் சந்தோஷம் குறைந்துவிட்டது” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். சீமாவின் அனுபவம், சம்பளம் அதிகரித்தாலும் மனநிறைவு மற்றும் வாழ்க்கை சுகம் குறைந்துவிடுகிறது என்பதை வெளிப்படையாக காட்டுவதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.