கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள ஒரு தியேட்டரில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கு படம் பார்க்க வந்த ஒரு ஐ.டி. பெண் ஊழியர், முன்வரிசையில் அமர்ந்தவுடன் லேப்டாப்பை திறந்து அலுவலக வேலை செய்யத் தொடங்கியதாக, அங்கு இருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து ரெடிட் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “பெங்களூருவின் குழப்பமான வேலை கலாசாரம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Woman working on Laptop in Theater! Blore work culture is wild!
byu/Sea_Solution5627 inbangalore
இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர், “படம் பார்க்க வந்தபோதும் வேலை செய்வது அந்த பெண் தன்னம்பிக்கையற்றவர் என்பதை காட்டுகிறது” என விமர்சித்துள்ளனர்.
அதே சமயம், மற்றொரு தரப்பு, “படம் தொடங்குவதற்கு முன் நேரத்தை வீணாக்காமல், அலுவலக வேலையை சீக்கிரம் முடிக்க நினைத்திருக்கலாம்” என ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். தியேட்டரில் வேலை பார்த்த ஐடி பெண்ணின் இந்த செயல், பெங்களூருவின் வேலை-வாழ்க்கை சமநிலை குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
