தளபதி விஜய் நடிப்பில் சென்ற ஜனவரி மாதம் வெளியான படம் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தென் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் தமன். இவர் தெலுங்கில் போட்ட பல்வேறு பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. இப்படி முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் தமனுக்கு சொந்தமாக ம்யூசிக் ஸ்டூடியோ இல்லையாம். இதன் காரணமாக அவர் பார்க் ஹயாத் ஹோட்டலில் ரூம் வாடகைக்கு எடுத்து அங்கே இசையமைத்து வருகிறாராம். அங்கு அவரது பெயரில் பல்வேறு அறைகள் புக் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

அதன்படி அவர் புக் செய்துள்ள இந்த அறைகளுக்கு வாடகையை தயாரிப்பாளர்கள் தான் கட்டுவார்களாம். அந்த அடிப்படையில் தன் ஹோட்டல் பில்லை தயாரிப்பாளருக்கு அனுப்பிவைத்துள்ளார் தமன். பின் அவர் அனுப்பிவைத்த பில்லை பார்த்து தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம். ஏனெனில் அவர் அனுப்பிய பில்லின் தொகையானது ரூ.40 லட்சம் ஆகும். உடனே இவருக்கு ரூம் போட்டு கொடுத்தது பெரிய தப்பு என தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.