சென்னையில் ரூட் தல என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்துவரும் அட்டூழியங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அவர்கள் சாலையில் ஆட்டம் போட்டும், பேருந்துகளில் பாடல் பாடியும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் மீண்டும் பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்டனர்.  அவர்கள் செய்யும் அட்டகாசத்தால் பிராட்வே மற்றும் பூந்தமல்லி இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வந்த நிலையில் வீடியோவில் உள்ள மாணவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.  இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்தது.