ஆக்ராவில் பரபரப்பான சாலை ஒன்றில் பேருந்தை நிறுத்திவிட்டு, அதன் முன்பாக இளைஞர் ஒருவர் தண்டால் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ரீல்’ எடுக்கும் மோகத்தில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்த அந்த இளைஞரின் செயல் கடும் விமர்சனங்களை எழுப்பியது.

இந்த வீடியோ காவல்துறையினரின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அந்த இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு ஆக்ரா காவல்துறையினர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில், “ரீல் மீது ஆசை, ஆனால் நிஜத்தில் அபராதம்” என்கிற வாசகத்துடன் பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by UP POLICE (@uppolice)

“>

மேலும் ஆபத்தான முறையில் வீடியோ எடுத்து மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போக்குவரத்து விதிகளை மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.