மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இக்கட்டான நிலையிலும், இந்தியாவிற்கான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய இரண்டு எல்பிஜி (LPG) கப்பல்கள் ஆபத்தான ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன.
‘கிரீன் சான்வி’ (Green Sanvi) என்ற கப்பல் இன்றைய தினமே இந்தியக் கடற்கரையை வந்தடைய உள்ள நிலையில், ‘கிரீன் ஆஷா’ (Green Asha) என்ற மற்றொரு கப்பல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தக் கப்பல்களின் வருகை இந்தியாவிற்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.
அதேசமயம், பாரசீக வளைகுடா பகுதியில் இன்னும் 16 கப்பல்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கப்பல்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சிகளும், சர்வதேச அளவில் நிலவும் பதற்றமும் இந்திய எரிசக்தித் துறையில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
