ரிஷப ராசி அன்பர்களே,

இன்று மற்றவர்கள் மீது பறிவு காட்டக்கூடும். இறைவழிபாட்டில் மிகுந்த ஆர்வம் கொள்வீர்கள். காரிய வெற்றிக்காக கடவுள் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கடினம். போராடி வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும். வீடு மாற்றம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெகு நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

அடுத்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்கும். பொறுப்புகள் கூடும் நாள் என்று சொல்லலாம். மன தைரியம் அதிகரிக்கும். இந்த நாள் மகிழ்ச்சி மிக்க நாளாக அமையும். பெண்களுக்கு இனிய கனவுகள் மேலோங்கும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பீர்கள்.

திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டால் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். இன்று மாணவர்கள் இரவு நேர பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். விளையாடும் போது கவனமாக இருங்கள். இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஐந்து

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்