மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் சொன்ன சொல்லை செயலாக்கி காட்டும் நாளாக இருக்கும். வெளி வட்டார பழக்கவழக்கங்களை விரிவாக்கிக் கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கு முயற்சி செய்வீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். இன்று நீங்கள் ஓய்வாக காணப்படுவீர்கள்.

சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். பண வரவு அதிகரிக்கும். வாழ்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் கைகூடும். பயணங்களை சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். பிரச்சனைகள் பெரிதாக இருக்காது. சமாளித்து வெற்றி பெறும் சூழல் உள்ளது.

காதலை பொருத்தவரை பிரச்சனை இல்லை. இன்று மாணவர்கள் பொறுப்புடன் காணப்படுவீர்கள். விளையாட்டு புத்தியுடன் செயல்படுவீர்கள். இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்