ரிஷப ராசி அன்பர்களே,

இன்று எதிர் மனப்பான்மை உள்ளவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்களை குறை சொல்ல வேண்டாம். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடல் நலனை பாதுகாக்கலாம். பணம் விஷயங்களில் யாருக்கும் முன் ஜாமீன் கொடுக்க வேண்டாம்.

கொடுத்த கடன் வசூலாக கால தாமதம் ஏற்படும். நினைத்த வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பேச்சு குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுங்கள். நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். இந்த நாளில் இறைவன் அருளால் காரிய வெற்றி இருக்கும். புதுப்புது யோசனைகள் மனதில் தோன்றும். கடன் பிரச்சனையை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

இன்று பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுயமரியாதையை வெளிப்படுத்துவீர்கள். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கல்வியில் ஆர்வம் கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்