ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று நல்லவரின் நட்பு மன நிறைவை ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில் நல்லபடியாக நடக்கும். குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும். தாராள பணவரவு இருக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். கணவன் மனைவி இடையே இருந்த ஊடல் நீங்கிவிடும். உறவினர்களிடமிருந்து மனஸ்தாபங்கள் மாறும்.

கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். பொறுமையால் முன்னேற்றத்தை காண முடியும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். தயவு செய்து முன் கோபம் வேண்டாம். அக்கம் பக்கத்தில் பேசும் போது கவனமாக இருங்கள். இனிய கனவுகள் மேம்படும் நாள் என்றே சொல்ல முடியும்.

இன்று மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்