மேஷம் ராசி அன்பர்களே,

இன்று அறிமுகம் இல்லாத நபர்களிடம் அதிகமாக பேச வேண்டாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி அடையும். சிந்தித்து முடிவெடுங்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். மனநிலையை சீராக வைத்துக் கொள்ளுங்கள். மனக்கவலை குறையும்.

பண வரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றி கொடுக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். இன்று பெண்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை. காரியங்கள் கைகூடும். முடிவு தெளிவாக எடுப்பீர்கள். இந்த நாள் புத்துணர்ச்சி பெருகும் நாள் என்றே சொல்ல முடியும். இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள்.

காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். கல்வியில் ஏற்பட்ட தடை விலகி செல்லும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: ஐந்து, ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்