மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று செய்யும் செயல்களில் தலைமை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் அற்புதமாக நடக்கும். வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள் கூடுதல் வருமானம் கிடைக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். அரசு சார்பில் ஆதாயம் கிடைக்கும்.

வாழ்க்கைத் துணையால் லாபம் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவ முன் வருவீர்கள். மன சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். இன்று பெண்களுக்கு பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. நிம்மதியாக காணப்படுவீர்கள்.

காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது நல்லது. இன்று மாணவர்கள் கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும். உயர்கல்வி வெற்றியைக் கொடுக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்