ரிஷபம் ராசி அன்பர்களே, 

இந்த நாள் மனதில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இடையூறாக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆதாயமான பண வரவு இருக்கும். மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் போது கவனமாக இருங்கள். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

குடும்பத்திற்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள். உங்கள் நல்ல மனதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். இன்று பெண்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் சரியாகும். மாறுபட்ட சிந்தனையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெண்களுக்கு இந்த நாள் கனவுகள் நினைவாகும் நாளாக இருக்கும்.

இன்று மாணவர்கள் தைரியமாக முடிவெடுப்பீர்கள். கல்வியில் அக்கறை இருக்கும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்