மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று சில முடிவுகளை யோசித்து எடுக்க வேண்டியது இருக்கும். திட்டமிட்ட பணியை மிக எளிமையாக செய்து முடிப்பீர்கள். தொழில் உற்பத்தி பணி சிறப்பாக நடக்கும். விரும்பிய உணவுப் பொருட்களை உண்டு மகிழ்வீர்கள். ஆன்மிக கனவுகள் வரக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்கள் மூலம் நல்லது நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சியாக அமையும். நிதி நெருக்கடிகளை சமாளித்து விடுவீர்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். குடும்பத்துடன் கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். இந்த நாள் நல்ல நாளாக அமையும்.

மாணவர்கள் இன்று சிறந்து விளங்குவார்கள். விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெற முடியும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்