மேஷம் ராசி அன்பர்களே, 

இந்த நாள் உங்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். மனப்பதட்டம் கொள்ள வேண்டாம். தைரியமாக முடிவுகளை எடுக்க முடியும். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். இந்த நாளை அற்புதமாக கொண்டாட முடியும். வாழ்க்கையில் பட்ட துயரங்களுக்கெல்லாம் நல்ல பலன் இன்று கண்டிப்பாக கிடைக்கும்.

இந்த நாள் உறவினர்கள் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் சொந்த விஷயங்களை பேச வேண்டாம். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். சுய தேவை பூர்த்தியாகும். இஷ்டப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். இன்னல்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும் நாள் என்றே சொல்ல முடியும்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். காரியங்களை அற்புதமாக செய்து முடிக்க வேண்டும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: ஒன்று ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்