மீனம் ராசி அன்பர்களே,

இன்று அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் ஏற்படும். காரியங்களை மிகவும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் சூழல் உள்ளது. திறமைகள் வெளிப்படும். வாழ்க்கையில் வளம் பெற புதிய சூழல் உருவாகும். உங்கள் பேச்சை சிலர் ஏற்க மறுப்பார்கள். அதை நினைத்து கவலைப்பட வேண்டாம்.

இறைவன் அருளால் எல்லாம் சரியாகும். தொழில் வியாபாரத்திற்கு எந்த பிரச்சனையும் வராது. எதையும் சமாளித்து வெற்றி பெற முடியும். இரவு நேர பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். கடந்த கால கடன்கள் குறைந்து விடும். கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது. புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

பெண்களுக்கு சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படக்கூடும். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். முழு முயற்சியுடன் எதிலும் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்