ரிஷப ராசி அன்பர்களே,

இந்த நாள் நீங்கள் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டிய சூழல் இருக்கும். செய்யும் செயலை நிதானமாக செய்யுங்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும். செலவுகள் அதிகரிக்கக்கூடும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்று உறுதியுடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் வரும் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்தது நடக்கும். மனக்குழப்பம் நீங்கும். பொறுமையாக இருந்து எதிலும் ஈடுபடுவதால் வெற்றி கிடைக்கும். இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக தான் இருக்கும். பயம் வேண்டாம். பெண்கள் துணிச்சலுடன் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தில் பேசும் போது கவனமாக இருங்கள்.

இன்று கோபத்தை தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சிகளில் வெற்றி ஏற்படும். இன்று மாணவர்கள் படிப்பில் முழு அக்கறை கொள்வீர்கள். விளையாடும் போது கவனமாக இருங்கள். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடகிழக்கு

அதிஷ்ட எண்  :  ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்