மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று காலையில் கலகலப்பாக காணப்படுவீர்கள். பிள்ளைகளுடன் கொஞ்சி பேசி மகிழ்வீர்கள். சிறப்பான செயல்களை செய்து முடிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூல் செய்வீர்கள். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக இருக்கும். வியாபாரமும் செழித்து வளரும். இந்த நாள் மகிழ்ச்சி மிக்க நாளாகவே இருக்கும். பெண்கள் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காரியங்களில் வெற்றி ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

இன்று சிந்தித்து எடுக்கும் முடிவுகளிலும் வெற்றி உண்டாகும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தித்து எடுக்கும் முடிவுகளால் நல்ல பலன் உண்டு. கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். விடுமுறை நாளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  வடகிழக்கு

அதிஷ்ட எண்  :  ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  பச்சை மற்றும் மஞ்சள் நிறம்