இந்திய அணியின் வரலாற்று வெற்றியை நாடே கொண்டாடி வரும் வேளையில், அந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த சஞ்சு சாம்சன், எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாக ஒதுங்கி இருந்தது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. மற்ற வீரர்கள் கேமரா வெளிச்சத்திலும், ரசிகர்களின் கொண்டாட்டத்திலும் திளைத்துக் கொண்டிருந்த போது, சஞ்சு மட்டும் ஒரு ஓரமாகத் தனிமையில் இந்த வெற்றியை ரசித்துக் கொண்டிருந்தார்.
Bro is the prime reason why the entire nation is celebrating now but while others were enjoying all the spotlights, Sanju Samson preferred to be in tranquility. pic.twitter.com/46OCbFBzda
— Deepu (@deepu_drops) March 9, 2026
எப்போதும் அமைதியைக் கடைப்பிடிக்கும் சஞ்சு, இந்த இமாலய வெற்றிக்குப் பிறகும் தனது அடக்கமான குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என்பதற்கு ஏற்ப, களத்தில் தனது பங்களிப்பைச் சரியாகச் செய்துவிட்டு, ஆரவாரமின்றி அமைதியைக் கொண்டாடிய இவரது புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விளம்பரங்களுக்காக ஓடாமல், நிம்மதியைத் தேடும் இவரது குணம் ‘சஞ்சு சாம்சன்’ ஒரு தனி ரகம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
