அயோத்தியில் ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி 2024 ஜனவரி 22 ஆம் தேதி திறந்து வைக்கிறார். ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார். இந்த ராமர் கோவில் 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில் 3 தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மீகி ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை அமைகின்றது.