பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பல வங்கிகளில் கணக்குத் திறந்த பின்னர் செலுத்திய பணத்தை எடுக்காமல் அப்படியே விட்டு விடுகிறார்கள். அவ்வாறு பல வருடங்களாக வங்கியில் இருக்கும் தொகையை உரிமையாளரிடம் சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ள நிலையில் இதற்காக UDGAM என்ற போர்ட்டலையும் ரிசர்வ் வங்கி தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்தப் போர்ட்டல் மூலம் வாடிக்கையாளர்கள் எந்தெந்த வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதற்கு முதலில் https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/register. என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்து உங்களது பெயரில் உள்ள அனைத்து வங்கிக் கணக்குகளின் பட்டியலையும் காணலாம். அதன் பிறகு பான் கார்டு எண், வாக்காளர் ஐடி அல்லது கடவுச்சொல் என்னை பதிவு செய்து தேடல் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களது வங்கி கணக்கில் உள்ள இருப்பு தொகை மற்றும் பிக்சட் டெபாசிட் தொகை ஆகிய அனைத்து விவரங்களும் தோன்றும். இதன் மூலம் பயன்படுத்தாமல் இருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து நீங்கள் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.