இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகும் நிலையில் சில வீடியோக்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஐஸ்கிரீம் வாகனம் ஒன்று கடலில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இங்கிலாந்து நாட்டில் உள்ள காரன் வாலில் பகுதியில் பிரபல கடற்கரை ஒன்று அமைந்துள்ளது. இங்கு விற்பனை செய்வதற்காக ஐஸ்கிரீம் வாகனம் ஒன்று வந்தது.

அப்போது கடலில் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில் ராட்சச அலைகளில் ஐஸ்கிரீம் வாகனம் அடித்து செல்லப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் ஐஸ்க்ரீம் வாகனத்தை வெளியே கொண்டு வர முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாகனத்தை மீட்டனர். மேலும் அந்த சமயத்தில் அருகில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.