உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூரைச் சேர்ந்த ராம்சேத் மோச்சி, புற்றுநோய் மற்றும் காசநோய் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு இன்று (நவம்பர் 11) காலை காலமானார்.

அண்மையில் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல மேடைகளில் ராம்சேத் மோச்சியைப் பற்றிப் பேசியிருந்தார். 2024-ல் சுல்தான்பூரில் உள்ள ராம்சேத்தின் கடைக்குச் சென்று சந்தித்த ராகுல் காந்தி, அவருக்கு நவீன தையல் இயந்திரம் மற்றும் மூலப்பொருட்களை அளித்து அவரது தொழிலை மேம்படுத்த உதவியதுடன், அவரை டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரிடமும் அறிமுகப்படுத்தினார்.

ராம்சேத்தின் உடல்நிலை மோசமடைந்த தகவல் கிடைத்ததும், ராகுல் காந்தி அவரது சிகிச்சையை அலகாபாத் புற்றுநோய் மருத்துவமனையில் ஏற்பாடு செய்திருந்தார். ராம்சேத்தின் மறைவுச் செய்தி அறிந்த ராகுல் காந்தி, உடனடியாக அவரது மகனைத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதுடன், அமேதி மற்றும் சுல்தான்பூர் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலம் நிதி உதவியையும் அளித்து, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.