கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன் மூலம் அவரின் சொத்து மதிப்பு தெரிய வந்துள்ளது. அதன்படி கையில் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருக்கிறது. வங்கியில் 26,25,157 ரூபாய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் 4,33,60,519 ரூபாய் உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் வழியாக 3,81,33,572 உள்ளதாகவும், தங்க பத்திரம் மூலம் 15,21,740 உள்ளது. ராகுல் காந்தியிடம் சொந்தமாக கார் மற்றும் வீடு இல்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.