ராகுல் காந்திக்கு பிஎஃப்ஐ பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாட்டில் போட்டியிட, தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) உதவியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெற்றதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி, வயநாட்டில் தேர்தலில் போட்டியிட பயங்கரவாத அமைப்பான பிஎஃப்ஐ ஆதரவை ராகுல் காந்தி பெற்றதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்துக்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இந்துக்களை கொல்லத் திட்டமிடும் பிஎஃப்ஐயின் உதவியை ஏன் பெறுகிறார் என கேள்வியெழுப்பினார்.