டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டில் இன்று பெண் விவசாயி ஒருவர் சோனியா காந்திய சந்தித்துள்ளார். அப்போது அவர், ராகுல் காந்திக்கு எப்போது திருமணம்’ என பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி முன்பு சட்டென கேள்வி கேட்டுள்ளார். இதற்கு சோனியா காந்தி, ‛நீங்கள் ஒரு பெண்ணை கண்டுபிடித்து தாருங்கள்’ என தெரிவித்துள்ளார்.

இந்த பதிலை கேட்டதும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அனைத்து பெண் விவசாயிகளும் சிரித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.