தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் ரஷ்யாவிற்கு அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு ராக்கெட் சயின்ஸ் என்ற திட்டத்தை தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு மூத்த விஞ்ஞானி சிவதானும் பிள்ளை பயிற்சி வழங்கினார்.

பயிற்சி பெற்ற 75 மாணவர்கள் ரஷ்ய விண்வெளி மையத்தை பார்ப்பதற்கு மாஸ்கோ செல்ல உள்ளனர். முதல் கட்டமாக 50 மாணவர்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ரஷ்யா செல்ல உள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களை யாரும் குறை சொல்ல முடியாது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதி சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.