தமிழக அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது ஆயிரம் புதிய பேருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருக்கைகள், ஜன்னல்கள் மற்றும் கம்பிகள் ஆகியவை சேதமடைந்த பழைய பேருந்துகளை சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போது சீரமைக்கப்பட்டு வரும் பேருந்துகளில் பழைய வண்ணம் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிறத்தையும் அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கி வரும் பேருந்துகளில் நீளம், பச்சை மற்றும் பிங்க் உள்ளிட்ட நிறங்கள் அடிக்கப்பட்டுள்ள நிலையில் அதனால் சீரமைக்கப்படும் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது. எனவே இனி தமிழகத்தில் அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது.