திருச்சியில் ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை உள்ளிட்ட கோவில்களுக்கு சுற்றுலா பயணிகள் பலரும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் தமிழக அரசு சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழகம் சார்பாக மூன்று நாள் டூர் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு நெற்களஞ்சியம் டூர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் புராதான கோவில்கள் மற்றும் வரலாற்று தொடர்பான இடங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இந்த ஊரில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகள் அடங்கும் எனவும் இந்த இடங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாள் திருச்சி டூர் பேக்கேஜ், இரண்டு நாட்கள் நவகிரக டூர் பேக்கேஜ், மூன்று நாட்கள் நெற்களஞ்சியம் டூர் மற்றும் மூன்று நாட்கள் கொடைக்கானல் டூர் பேக்கேஜ் என பல வகைகள் உள்ளது. இதற்கு கட்டணமாக 1300 ரூபாய் வசூல் செய்யப்படும் எனவும் இந்த திட்டத்தில் பயன்பெற ttdconline.com  என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.