ரஷ்யாவை பற்றி தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததால் google நிறுவனத்திற்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு உக்ரைனுடன் போர் தொடங்கிய நிலையில் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷ்யாவிற்கு முரண்பாடு ஏற்பட்டது.

ரஷ்யாவை குறித்து தீவிரவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகவும் அதனை நீக்க கூறியதற்கு google நிறுவனம் பதில் அளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கூகுளின் இந்த செயல் ஒரு தலைப்பட்ச பிரச்சாரம் என ரஷ்யா விமர்சித்து இருந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அந்நாடு ராணுவ சிறப்பு நடவடிக்கை என்று தான் குறிப்பிட்டு வருகிறது.