கோரமண்டல் ரயில் விபத்திற்கு உள்ளானதற்கும் மாபெரும் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கும் மத்திய அரசின் அலட்சியமே காரணம் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விபத்தில் சுமார் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட உள்ள நிலையில் நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மின்னணு இணைப்பு அதாவது எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார். இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்திய மத்திய அரசின் அணுகுமுறையை இந்த விபத்திற்கு காரணம் என்று சு. வெங்கடேசன் எம்பி தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.